கூகுள் பே செயலி மூலம் பணம் அனுப்பினாலும் கட்டணமா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

இந்தியா டிஜிட்டலுக்கு மாற வேண்டும் என்றும் இந்திய மக்கள் டிஜிட்டலுக்கு மாற வேண்டும் என்ற மத்திய அரசின் வலியுறுத்தி அரும் நிலையில் அனைத்து பண பரிவர்த்தனைகளும் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்ய மக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பழகி வருகின்றனர்

இந்த நிலையில் கூகுள் பே மிக எளிதாக இருப்பதால் அதன் மூலம் படிக்காதவர்கள் கூட தற்போது பணபரிவர்த்தனை செய்ய பழகிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இதுவரை கூகுள் பே மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் சேவைக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை

ஆனால் தற்போது திடீரென ஒரு சில தனியார் வங்கிகள் கூகுள் பே மூலம் பண பரிவர்த்தனை செய்வதற்கு கட்டணம் விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஏற்கனவே ஒரு சில தனியார் வங்கிகள் இதற்கு கட்டணம் வசூலித்து வரும் நிலையில் தற்போது ஒரு முன்னணி தனியார் வங்கி முதல் 50 பண பரிவர்த்தனைக்கு கட்டணம் எதுவும் இல்லை என்றும், 51 முதல் 100 பண பரிவர்த்தனைக்கு ஒவ்வொரு பணம் பரிவர்த்தனைக்கும் ரூபாய் 3 கட்டணம் என்றும், 100க்கும் மேல் பண பரிவர்த்தனை செய்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூபாய் நான்கு கட்டணம் என்றும் அறிவித்துள்ளது

இதே ஆயிரம் ரூபாய்க்கு மேல் அனுப்புவதாக இருந்தால் சேவை கட்டணம் இரு மடங்கு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது வங்கிகளின் இந்த அறிவிப்பு கூகுளே பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது

Leave a Reply