shadow

குழந்தையை காப்பாற்றியதால் பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற மாலி இளைஞர்

மாலி நாட்டை சேர்ந்தவர் மமூது கசாமா என்ற 22 வயது இளைஞர் வேலை தேடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்றிருந்த நிலையில் அந்நாட்டில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்ததை பார்த்தார். அந்த கட்டிடத்தின் 4-வது மாடியில் பால்கனியை பிடித்தபடி 4 வயது குழந்தை அழுதபடி தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்ஹ கசாமா அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த குழந்தையை காப்பாற்ற யாரும் முன்வராததை கடும் மேலும் அதிர்ச்சி அடைந்த கசாமா சற்றும் யோசிக்காலம் ஸ்பைடர் மேன் பாணியில் கட்டிடத்தின் முன்புறத்தில் சுவரை பிடித்தபடி சிலந்தி பூச்சி போன்று மேலே ஏறினார்.

பின்னர் மாடி பால்கனியில் தொங்கி கொண்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டு காப்பாற்றினார். இதற்கிடையே தீயணைப்பு படையினரும் அங்கு வந்து விட்டனர்.

இதுகுறித்தா வீடியோ பேஸ்புக் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அதை தொடர்ந்து மமூது கசாமாவுக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்த நிலையில் குழந்தையை காப்பாற்றிய மமூது கசாமாவை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் நேரில் அழைத்து பாராட்டியதோடு அவருக்கு பிரான்ஸ் நாட்டின் நிரந்தர குடியுரிமை அளிப்பதாகவும், பாரிஸ் நகர தீயணைப்புத்துறையில் பணி வழங்கப்படும் என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இன்று அறிவித்துள்ளார்.

Leave a Reply