குழந்தைக்கு விருப்பமான சிக்கன் கொத்துக்கறி வடை

20சில குழந்தைகள் சிக்கன் சாப்பிடாது. சிக்கன் சாப்பிடாத குழந்தைகளுக்கு சிக்கனை வடை போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் (boneless ) – 300 கிராம்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
மிளகு தூள் – சிறிதளவு
கரம் மசாலா – 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பிரட் தூள் – 150 கிராம்
முட்டை – 1
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சிக்கனை நன்றாக கழுவி தண்ணீர் நன்றாக வடிந்த பின்னர் மிக்ஸ்யில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த சிக்கனுடன், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், மிளகு தூள் மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்துக் கொண்டு வடையாக அல்லது உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து அதில் உள்ள வெள்ளை கருவை மற்றும் ஊற்றி கொள்ளவும்.

* ஒரு பிளேட்டில் பிரட் தூளை வைத்து கொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்த உருண்டைகளை முட்டையில் பிராட்டிய பின்பு அதை பிரட் தூளில் போட்டு பிரட்டி எடுத்து எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும்.

* இப்போது சுவையான சிக்கன் கொத்துக்கறி வடை ரெடி.

* சிக்கனில் கொத்துகறியும் வாங்கி செய்யலாம்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *