குழந்தைகளின் ஆபாசப்படம் பார்த்த வாட்டிகன் தூதர்: அதிர்ச்சியில் நெட்டிசன்

வாட்டிகன் அரண்மனையை சேர்ந்த முன்னாள் அமெரிக்க தூதர் ஒருவர் குழந்தைகள் பாலியல் படம் பார்த்ததாக வெளிவந்துள்ள செய்தியால் நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்த வழக்கு ஒன்றில் அந்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவாக போற்றப்படும் போப் வாழும் வாட்டிகன் நகர அரண்மனையின் சார்பில் உலக நாடுகளில் தூதரகங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள வாட்டிகன் தூதரகத்தின் தலைமை தூதராக பணியாற்றிய மோன்சைனோர் கார்லோ ஆல்பெர்டோ கபெல்லா என்பவர் கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட குழந்தைகள் பாலியல் படங்களை பார்த்து ரசித்து வந்ததாகவும் தெரியவந்து. இதனையடுத்து தூதர் பணியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட அவர் மீது விசாரணை நடைபெற்று வந்தது.

குழந்தைகள் பாலியல் படத்தை பார்த்ததாக ஒப்புக்கொண்ட அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் யூரோ அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *