குமரி, நெல்லை மாவட்ட எம்.எல்.ஏக்கள் எங்கே? பொதுமக்கள் கொதிப்பு

குமரி மாவட்டத்தை கடந்த இரண்டு நாட்களாக ஓகி புயல் புரட்டி எடுத்த நிலையில் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

வீட்டில் தண்ணீர் புகுந்ததாலும், மின்வசதி இல்லாத காரணத்தாலும் அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் மூன்று மாவட்ட மக்கள் சிரமத்தில் உள்ளனர்.

ஆனால் நிவாரண பணிகளை கவனிக்க வேண்டிய இந்த பகுதியை சேர்ந்த ஆறு எம்.எல்.ஏக்கள் தொகுதிப்பக்கம் எட்டியே பார்க்காமல் இருப்பது அங்குள்ள பொதுமக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

கன்னியாகுமரி எம்.எல்.ஏ அகஸ்தின் (திமுக), நாகர்கோவில் எம்.எல்.ஏ சுரேஷ்ராஜன் (திமுக), கொளச்சல் எம்.எல்.ஏ பிரின்ஸ் (காங்), பத்மநாபபுரம் எம்.எல்.ஏ மனோதங்கராஜ்( திமுக), விளவங்கோடு எம்.எல்.ஏ விஜயதாரிணி (காங்), கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் (காங்) ஆகியோர்கள் தொகுதிப்பக்கம் உடனடியாக சென்று மீட்புப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *