குடியுரிமை சட்டம்: 48 மணி நேரத்தில் 68 பேர் மிஸ்டு கால் சாத்தியமா?

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள், மாணவர்கள், மற்றும் சமூக நல ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் குடியரசு சட்டத்திற்கு ஆதரவாக மிஸ்டுகால் கொடுக்கும் முறையை சமீபத்தில் பாஜக அறிமுகப்படுத்தியது

மிஸ்டுகால் கொடுக்கும்எண் அறிமுகமாகிய 48 மணி நேரத்தில் 68 லட்சம் மிஸ்டு கால் வந்திருப்பதாக அமித்ஷா சமீபத்தில் ஒரு கணக்கு கூறினார். 48 மணி நேரத்தில் 68 லட்சம் மிஸ்டுகால் என்பது சாத்தியமா? என சமூக வலை பயனாளிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

ஒரு வினாடிக்கு ஒரு மிஸ்டுகால் என்றாலும் ஒரு மணி நேரத்திற்கு 3600 மிஸ்டுகால் தான் கொடுக்க முடியும். அப்படி பார்த்தால் 48 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 800 மிஸ்டு கால்கள் மட்டுமே சாத்தியம். அப்படி இருக்கும்போது 68 லட்சம் மிஸ்டுகால் எப்படி கணக்கு? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

உண்மையில் 68 லட்சம் மிஸ்டு கால் வர வேண்டும் என்றால் 78 நாட்கள் ஆகும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். இதற்கு பாஜகவினர் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply