குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடையா? பெரும் பரபரப்பு

குடியுரிமை சட்டம் குறித்த அனைத்து வழக்குகளும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது

மேலும் இது சம்பந்தமான 144 மனுக்கள் மீதான விசாரணையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் அமர்வு ஒன்று அமைக்கப்படும் என்றும் இதுகுறித்து உயர் நீதிமன்றங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே கடந்த 10ஆம் தேதி அமலுக்கு வந்த குடியுரிமை சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது

Leave a Reply