குஜராத் ஐகோர்ட்டில் வேலை வேண்டுமா?

குஜராத்தின் உயர் நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள அஸிஸ்டென்ட் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: அகமதாபாத்
பணி: அஸிஸ்டென்ட்
காலியிடங்கள்: 767
சம்பளம்: மாதம் ரூ.19,900 – 63,200
வயதுவரம்பு: 14.07.2018 தேதியின்படி 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள். மேலும் கம்யூட்டரில் பணியாற்றும் திறன், ஆங்கிலம் மற்றும் குஜராத்தியில் தட்டச்சு செய்யும் திறனோடு, ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தியில் புலமை பெற்றிருப்பது விரும்பந்தக்கது.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ரூ.300 கட்டணமாக செலுத்தினால் போதுமானது. தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு வினாக்கள் ஆங்கிலம் மற்றும் குஜராத்தியில் அமைந்திருக்கும்.

ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-07-2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *