Chennai Today News

குஜராத், இமாச்சல பிரதேசல் தேர்வு இறுதி முடிவுகள்:

குஜராத், இமாச்சல பிரதேசல் தேர்வு இறுதி முடிவுகள்:

குஜராத் மற்றும் இமாச்சலபிரதேச மாநிலங்களின் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்த நிலையில் முதல் ஒருசில மணி நேரம் தவிர பெரும்பாலும் இரு மாநிலங்களிலும் பாஜகவே முன்னிலை வகித்தது. இந்த நிலையில் தற்போது இரு மாநிலங்களிலும் அனைத்து தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இறுதி தேர்தல் முடிவுகளை தற்போது பார்ப்போம்

குஜராத்: மொத்த தொகுதிகள் 182 (ஆட்சி அமைக்க 92 தொகுதிகள் தேவை)

பாஜக 99 தொகுதிகளில் வெற்றி
காங்கிரஸ் கூட்டணி 80 தொகுதிகளில் வெற்றி
இதர கட்சிகள் 3 தொகுதிகளில் வெற்றி

இமாச்சலப் பிரதேசம்: மொத்த தொகுதிகள் 68 (ஆட்சி அமைக்க 35 தொகுதிகள் தேவை)

பாஜக 44 தொகுதிகளில் வெற்றி
காங்கிரஸ் 21 தொகுதிகளில் வெற்றி
இதர கட்சிகள் 3 தொகுதிகளில் வெற்றி

இரு மாநிலங்களிலும் பாஜக தனிமெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!