shadow

குஜராத்தில் பாஜக சரிவு ஏன்? ஆய்வு நடத்த வேண்டும் என்கிறார் சுப்பிரமணியன் சுவாமி

பாரத பிரதமர் நரேந்திரமோடி ஆட்சி அமைத்த பின்னர் நடைபெற்ற மாநிலங்களின் தேர்தலில் பெரும்பாலும் பாஜக வெற்றி வாகையே சூடியுள்ளது. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் பாஜக வரலாறு காணாத வெற்றியை பெற்றது. விரைவில் காங்கிரஸ் இல்லாத மாநிலங்களை உருவாக்குவோம் என பாஜக தலைவர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் அந்த வெற்றி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கருத்துக்கணிப்புகளும் அதையே கூறி வந்தன.

ஆனால் இன்று காலை முடிவுகள் அறிவிக்கப்பட தொடங்கியது பாஜக இழுபறியில் தான் முன்னிலை பெற்று வருகிறது. இதுகுறித்து கருத்து கூறிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ‘பாஜகவுக்கு குஜராத்தில் ஏன் இடங்கள் குறைந்தது என ஆய்வு நடத்த வேண்டும். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பாஜக கொள்கைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும், பெரிய அளவில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று கூறிய சுவாமி பொருளாதார கொள்கையில் தவறு நடந்துள்ளதாகவும், அதை சரிசெய்ய வேண்டிய நேரம் இது என்றும் கூறினார்.

Leave a Reply