கிரிக்கெட் விளையாட்டு திரைப்படத்தில் தீபிகா படுகோனே

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 1983ஆம் ஆண்டு முதல்முறையாக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை வென்ற சரித்திர சாதனை நிகழ்ச்சி பாலிவுட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. ’83’ என்ற பெயரில் உருவாகி வரும் இந்த படத்தில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர்சிங் நடித்து வரும் நிலையில் அவருடைய மனைவியாக தீபிகா படுகோனே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தீபிகாவின் கேரக்டர் இந்த படத்தில் சிறப்பு தோற்றம் தான் என்றும், படத்தில் அவருடைய காட்சி வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தில் தானும் ஒரு கேரக்டரில் நடிப்பது தனக்கு பெருமை என தீபிகா கூறியுள்ளார்.

இந்த படத்தில் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிகர் ஜீவா நடித்து வருகிறார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது

Leave a Reply