காஷ்மீர் மாணவிக்கு ஹாரிபாட்டர் எழுத்தாளர் அனுப்பிய பரிசு

ஜம்மு காஷ்மீரில் பள்ளி மாணவி ஒருவருக்கு உலகப் புகழ்பெற்ற ஹாரிபாட்டார் தொடர்கதை எழுத்தாளர் பரிசுகளை அனுப்பி வைத்துள்ள சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் ஹாஜி பப்ளிக் ஸ்கூலில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவி குல்சம். இவர் தனக்குப் பிடித்த எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங்குக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஏப்ரல் மாதம் அவர் எழுதிய கடிதத்தை அவரது ஆசிரியர் என்தா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த எழுத்தாளர் ரௌலிங் மாணவி குல்சமுக்கு ஒரு பரிசு அளிக்க விரும்பவதாக கூறினார்.

இதன்படி, அவர் அனுப்பிய பரிசுகள் மாணவி குல்சமுக்கு சனிக்கிழமை கிடைத்துள்ளது. ஹாரி பாட்டர் தொடர்கதையின் ஒட்டுமொத்த தொகுப்பு உட்பட பல புத்தங்களையும் ஒரு கடிதத்தையும் ரௌலிங் குல்சமுக்கு அனுப்பியுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *