shadow

காவிரி விவகாரத்தில் நீதித்துறை மீது நம்பிக்கை குறைகிறது. மு.க.ஸ்டாலின்

காவிரி விவகார வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இன்று வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டிய மத்திய அரசு இன்றும் தாக்கல் செய்யவில்லை. இரு மாநிலங்களுக்கு இடையே சட்டம் ஒழுங்கை கணக்கில் கொண்டு இந்த விஷயத்தில் தீர்வு காண முடியவில்லை என மத்திய அரசு தெரிவித்தது.

இதனையடுத்து வரும் 14 ஆம் தேதி வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அன்றைய தினம் மத்திய நீர்வளத்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கூறியது. அதுமட்டுமின்றி தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய 4 டி.எம்.சி தண்ணீர் குறித்து உச்சநீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்​லை

நீதிமன்றத்தின் இந்த செயல்பாடு தமிழகத்திற்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. கர்நாடக தேர்தல் மே 12ஆம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு வசதியாக மே 14ஆம் தேதி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகவும், * மே 14ஆம் தேதியாவது காவிரி வாரியம் அமைக்கப்பட்டு, இறுதி தீர்ப்பின் பலனை தமிழக விவசாயிகள் அனுபவிப்பார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் உச்சநீதிமன்றம் உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் காவிரி விவகாரத்தில் நீதி வழங்குவதில் செய்துவரும் தாமதம், நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை குறைக்கிறது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply