shadow

காலா படகுழுவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய வில்லன் நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்தை இயக்கியுள்ள பா.ரஞ்சித் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியில் பிசியாக உள்ளார். கடந்த இரண்டு நாட்களாக இந்த படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகரின் டப்பிங் பணிகள் நடந்து வந்தது

இந்த நிலையில் நானாபடேகர் நேற்றுடன் தனது பகுதியின் டப்பிங் பணியை முடித்து கொடுத்துள்ளார். இந்த படத்தின் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளுக்கும் அவர் தனது சொந்தக்குரலில் டப்பிங் செய்தார். கடந்த 2008ஆம் ஆண்டு பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’ படத்தில் நானா படேகர் நடித்தபோது அவருக்கு நிழல்கள் ரவி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படத்தில் தெளிவான தமிழ் உச்சரிப்புடன் அவர் டப்பிங் செய்தது படக்குழுவினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், நானா படேகர், சமுத்திரக்கனி, ஹூமோ குரேஷி, சம்பத்ராஜ், அர்விந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தனுஷின் வொண்டர்பா நிறுவனம் தயாரித்துள்ளது.

Leave a Reply