கார் வெடிகுண்டு வீசி தாக்கியதாக நாடகமாடிய அரசியல் கட்சி பிரமுகர்

விளம்பரத்திற்காக தன்னுடைய காரில் வெடிகுண்டு வீசப்பட்டதாக நாடகமாடிய இந்து மக்கள கட்சி பிரமுகர் உள்ளட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியை சேர்ந்த காளிகுமார் என்பவர் இந்து மக்கள் கட்சியின் துணை அமைப்பான அனுமன் சேனா என்ற அமைப்பில் நிர்வாகியாக உள்ளார். இவர் சமீபத்தில் தன்னுடைய காரில் நண்பர் ஒருவருடன் சென்றபோது சோழவரம் சுங்கச்சாவடி அருகே ஒரு கும்பல் தங்கள் காரை வழிமறித்து பெட்ரோல் குண்டு வீசியதாகவும், அதில் கார் தீப்பற்றி எரிவதாகவும் புகார் அளித்தார். இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் எரிந்து கொண்டிருந்த காரை அணைத்தனர்.

தன் காரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், பெட்ரோல் குண்டு வீசி தாக்கியதாகவும், தன்னையும் கொல்ல முயன்றதாகவும் காளிகுமார் கூறியிருந்ததால் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு சிபி சக்கரவர்த்தி கூறுகையில், ‘விளம்பரத்திற்காக தன் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக காளி குமார் நாடகமாடியிருக்கிறார். இதுதொடர்பாக காளிகுமார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *