கார் விபத்தால் தாயின் வய்ற்றில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிர் பிழைத்த குழந்தை

பிரேசில் நாட்டில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டிரக் ஒன்று காரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் உள்ளே இருந்த கர்ப்பிணி பெண் தூக்கி வீசப்பட்டார்.

அப்போது தாயின் வயிற்றுக்குள் இருந்த குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளியேறி குப்பையில் விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக புல்தரையில் விழுந்ததால் குழந்தைக்கு எந்தவொரு சிறு காயமும் ஏற்படவில்லை. ஆனால் இந்த விபத்தில் கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக வந்த மீட்புக்குழுவினர் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளானர். மரணம் அடைந்த தாயின் அடையாளம் காண விசாரணை நடந்து வருகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *