கார்த்திகையில் கண் திறக்கும் யோக நரசிம்மர்

கார்த்திகை மாதம் யோக நரசிம்ம சுவாமி வீற்றிருக்கும் சோளிங்கர் தலத்து நரசிம்மர் கண் திறந்து பார்ப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

யோக நரசிம்ம சுவாமி வீற்றிருக்கும் திருத்தலங்களில் சோளிங்கர் உயர்ந்ததாக கருதப்படுகிறது. சோளிங்கர் என அழைக்கப்படும் சோழ சிங்கபுரம் நரசிம்மர் பெயரால் அமைந்ததாகும். இங்கு இரண்டு மலைகள் உள்ளன.

பெரிய மலை மீது நரசிம்ம சுவாமி யோக நரசிம்மராக விளங்குகிறார். பின் கரங்களில் சங்க சக்கரம் விளங்க, முன் கரங்களில் சிம்மகர்ண முத்திரைகளைக் கொண்டுள்ளார். இவருக்கு நேர் எதிரிலுள்ள சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் உள்ளார். இவர் நான்கு கரங்களுடன் சதுர்புஜ ஆஞ்சநேயராகக் காட்சியளிக்கின்றார். இது சிறந்த பிரார்த்தனைப் பதியாகும்.

இது முன்னாளில் ‘கடிகை’ என்று அழைக்கப்பட்டது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. கார்த்திகை மாதம் இத்தலத்து நரசிம்மர் கண் திறந்து பார்ப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனைகளைச் செலுத்துகின்றனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *