shadow

காந்தி’ பிறந்த போர்பந்தரில் முதல்முறையாக பாஜக வெற்றி

குஜராத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அக்கட்சி மீண்டும் தனிமெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில் மகாத்மா காந்தி பிறந்த மண்ணான போர்பந்தரில் முதல்முறையாக பாஜக வெற்றியை பதிவு செய்துள்ளது. போர்பந்தர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பாபுபாய் பொக்ரியா என்பவர், காங்கிரஸ் வேட்பாளர் அர்ஜூன் மோத்வாடியாவை விட 1855 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாஜக தொடர்ந்து குஜராத்தில் ஆட்சி அமைத்தாலும் போர்பந்தரில் மட்டும் வெற்றி பெறமுடியாமல் இருந்தது. ஆனால் இந்த முறை காந்தி பிறந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply