காதலனுடன் 100 நாட்கள் தங்கும் நடிகைக்கு ரூ.1.20 கோடி சம்பளம் தரும் டிவி சேனல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலருடன் கலந்து கொள்ளும் பிரபல பாலிவுட் நடிகைக்கு தொலைக்காட்சி நிறுவனம் ரூ.1.20 கோடி சம்பளம் தரவுள்ளது

வரும் ஞாயிறு முதல் 13வது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. ஞாயிறு அன்று 9 மணிக்கும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்

இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கவுள்ளார். அவருக்கும் மிகப்பெரிய தொகை ஒன்று சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் பிக்பாஸ் 13 நிகழ்ச்சியில் நடிகை ரஷாமி தேசாய், தன்னுடைய காதலர் அர்ஹான் கானுடன் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவருக்கு சம்பளம் ரூ.1.20 கோடி எனவும் தகவல் வெளிவந்துள்ளது

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

Leave a Reply