shadow

காஞ்சனா 3′ படத்தின் மோஷன் போஸ்டர் எப்போது ?

‘காஞ்சனா’ மற்றும் ‘காஞ்சனா 2’ ஆகிய திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ‘காஞ்சனா 3’ படத்தை நடித்தும் இயக்கியும் வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. ‘காஞ்சனா 1’ மற்றும் ‘காஞ்சனா 2’ ஆகிய படங்கள் நல்ல வெற்றியை பெற்றதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் வெளியாக உள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, கபீர்சிங், மனோபாலா, ஸ்ரீமான், தேவதர்ஷினி, சத்யராஜ், கிஷோர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.

Leave a Reply