‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கில் இருந்து விலகியதற்கு இதுதான் உண்மையான காரணமா?

அக்சயகுமார், கைரா அத்வானி, அமிதாப்பச்சன், மாதவன் ஆகியோர் நடிப்பில் காஞ்சனா என்ற சூப்பர்ஹிட் தமிழ்ப்படம், ‘லட்சுமி பாம்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆனது. இந்த படத்தில் இருந்து தான் விலகுவதாக இயக்குனர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸின் இயக்குனர் டிபார்ட்மெண்டில் அக்சயகுமாரின் தலையீடு அதிகம் இருந்ததாகவும், பாலிவுட் பாணியில் படமாக்குவதில் ராகவா திணறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பல காட்சிகள் ராகவாவின் விருப்பத்திற்கு எதிராக படமாக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இதனால் அக்சயகுமாரே ஒரு கட்டத்தில் இயக்குனரை மாற்ற முடிவு செய்துவிட்டதாகவும், இதனை அறிந்து கொண்ட ராகவா லாரன்ஸ் முன்கூட்டியே வெளியேறிவிட்டதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply