காஜல் அகர்வாலின் ஹாலிவுட் கணவர் பெயர் அறிவிப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால், ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். எதிர்பாராத ஒரு விபத்தில் காஜல் அகர்வாலும் அவரது கணவரும் சிக்கி கொள்கின்றனர். இதனால் அவர்கள் வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படுகிறது. அது என்ன திருப்பம் என்பதுதான் இந்த படத்தின் கதை

தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் ஆங்கில பதிப்பிற்கு ஜெப்ரி ஜீ சென் என்ற ஹாலிவுட் நடிகர் காஜல் அகர்வாலின் கணவராக நடிக்கவுள்ளார்.

இதே படத்தின் தெலுங்கு பதிப்பில் காஜல் அகர்வாலின் கணவராக மஞ்சுவிஷ்ணு நடிக்கவுள்ள நிலையில் தமிழ், இந்தியில் நடிக்கும் நாயகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

Leave a Reply