shadow

கவின் வெளியேறுவது நாடகமா? விஜய் டிவியின் டிஆர்பி தந்திரமா?

பிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறுவது போன்று நேற்றைய நிகழ்ச்சி முடிவடைந்தது மட்டுமன்றி, இன்றைய இரண்டு புரமோ வீடியோக்களிலும் கவின் வெளியேறுவது போன்ற காட்சிகள் உள்ளது. கவின்பெட்டி படுக்கைகள் எல்லாம் தயார் செய்வது போன்ற காட்சிகளும் உள்ளதால் அவர் வெளியேறிவிட்டதாகவே கூறப்படுகிற்து

ஆனால் உண்மையில் கவின் நேற்று வெளியேறி இருந்தால் இன்று காலையே அவர் வெளியேறியது குறித்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வந்திருக்கும். எனவே கவின் வெளியேறியது குறித்து செய்தி மற்றும் புகைப்படம் எதுவுமே வெளியே வரவில்லை

இதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்க வாய்ப்பில்லை என்றே ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது

மேலும் கவின் வெளியேறுவது போன்ற ஒரு நாடகத்தை ஏற்படுத்தி இந்த நிகழ்ச்சியின் டிஆர்பியை எகிற வைப்பதுதான் விஜய் டிவி தந்திரம் என்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி நேரத்தில் பரபரப்பாகவும் போட்டியாளர்கள் இடையே கடும் போட்டியும் பொறாமையும் இருக்கும். ஆனால் இந்த சீசனில் நேற்று வரை ஆறு பேர்களும் ஜாலியாகவும் சிரித்துக் கொண்டும் இருப்பதால் நிகழ்ச்சியை சீரியஸாக மாற்ற விஜய் டிவி செய்யும் தந்திரமே இந்த கவின் வெளியேற்றும் நாடகம் என்று கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *