shadow

கவர்னருடன் வாக்குவாதம் செய்த அதிமுக எம்.எல்.ஏவால் பரபரப்பு

புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடியுடன் அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் விழா மேடையில் வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற அரசு விழா ஒன்றில் அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் கலந்து கொண்டார். எம்.எல்.ஏ அன்பழகன் பெயர் நிகழ்ச்சி நிரலில் இல்லாததால் ஆத்திரமடைந்தார். அதன்பின்னர் அவருக்கு வரவேற்புரை பேச அனுமதிக்கப்பட்டதால் சமாதானம் அடைந்தார்.

பின்னர் அன்பழகன் எம்.எல்.ஏ நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கவர்னர் கிரண்பேடி, மைக்கை ஆஃப் செய்யும்படி உத்தரவிட்டார். இதனால் மைக் ஆஃப் செய்யப்பட்டாது. இதனால் மீண்டும் ஆத்திரமான அன்பழகன் எம்.எல்.ஏ, நேரடியாக கவர்னரிடம் வாக்குவாதம் செய்தார்.

‘நான் மக்கள் பிரதிநிதி. நான் பேசும் போது திடீரென மைக்கை நிறுத்தக் கூறுவது தவறானது. இது எம்எல்ஏவை அவமதிக்கும் செயல். உங்களுடைய அதிகாரத்தை அமைச்சரிடம் வைத்துக்கொள்ளுங்கள், என்று கூறினார். அன்பழகன் தமிழில் பேசியதால் ஆளுநர் கிரண்பேடி நீங்கள் கூறுவது புரியவில்லை, தயவு செய்து வெளியேறுங்கள் என்றார். அதற்கு அன்பழகன் எம்.எல்.ஏ, ‘என்னிடம் அப்படியெல்லாம் பேசக்கூடாது. நான் வெளியேற மாட்டேன், நீங்கள் வெளியேறுங்கள் என்று மிகுந்த ஆவேசத்துடன் கூறினார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே மேடையில் நேரடியாக கடும் மோதல் நிலவியது. அப்போது அமைச்சர் நமச்சிவாயம் அன்பழகனை சமாதானம் செய்து அமரும்படி கூறினார். ஆனால் அன்பழகன் விழா மேடையில் அமர மறுத்து விழாவில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply