கழுகு 2 டீஸர் ரிலீஸ் செய்யும் யுவன் சங்கர் ராஜா

நடிகர் கிருஷ்ணா நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த திரைப்படம் கழுகு. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ‘கழுகு 2’ என்ற திரைப்படம் தற்போது உருவாகியுள்ளது.

இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட உள்ளார் இந்த படத்தை ஸ்கிரீன்சீன் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட உள்ளது

கிருஷ்ணா, பிந்துமாதவி, காளி வெங்கட், யாஷிகா ஆனந்த் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய சத்யசிவா இயக்கியுள்ளார்.

Leave a Reply