கல்வி உதவித்தொகை: புதுப்பித்தல் விண்ணப்பங்கள் வரவேற்பு-

மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெறும் கல்லூரி மாணவர்களிடமிருந்து அதற்கான புதுப்பித்தல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்ட செய்தி: மத்திய அரசு கல்வி உதவித்தொகைகளை கடந்த 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளிலிருந்து பெற்று வரும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து, உதவித் தொகை புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடர்பான விவரங்களை ஆன் -லைனில் பதிவு செய்ய வரும் 15 -ஆம் தேதி (டிச.15) கடைசி நாளாகும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சமர்ப்பிப்பதற்கு டிசம்பர் 31 -ஆம் தேதி கடைசி நாளாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *