கல்லணை போல் பலமாக இருக்கின்றது அதிமுக: ஓ. பன்னீர்செல்வம்

ஜெயலலிதா இல்லாத அதிமுக வரும் தேர்தலுடன் முடிவுக்கு வந்துவிடும் என்றும், அதிமுக என்ற ஒரு கட்சியே தேர்தலுக்கு பின் இருக்காது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் கரிகாலன் கட்டிய கல்லணை போல் அதிமுக பலமாக இருப்பதாகவும், யார் அழைத்தாலும் கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்களோ, எம்.பிக்களோ விலைபோக மாட்டார்கள் என்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக என்ற கட்சி எம்.ஜி.ஆரால் அஸ்திவாரம் போடப்பட்டு ஜெயலலிதாவால் கட்டி எழுப்பப்பட்ட மாளிகை எனக் கூறினார்.

தாம் உண்மைக்குப் புறம்பாக பேசி வருவதாக பொத்தாம் பொதுவாகக் கூறும் டிடிவி தினகரன், எந்தக் கருத்தை உண்மைக்குப் புறம்பாகக் கூறுகிறேன் என்று குறிப்பிட்டுச் சொன்னால் அதற்கான பதிலை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *