shadow

கலைஞர் சாதிக்க முடியாததை நான் சாதிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் நேற்று திமுகவின் முப்பெரும் விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று பேசினார்.

எந்த தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்குமாறு தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் களத்திற்கு தயார் ஆகிவிட்டதை இக்கூட்டம் பறை சாற்றுவதாக தெரிவித்தார்.

மேலும் கலைஞர் சாதிக்க முடியாததை கலைஞரின் மகன் சாதித்து விட்டார் என்று சொல்லும் அளவிற்கு தொண்டர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் திமுக தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார்.

திமுக, தொண்டர்கள், ஸ்டாலின், கலைஞர்

Leave a Reply