கலைஞர் கேட்ட அதே கேள்வியை கேட்ட வரலட்சுமி

திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது அக்கட்சியில் இருந்து பிரிந்து அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்த எம்ஜிஆர், கடந்த 1973ஆம் ஆண்டு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற படத்தை தயாரித்து நடித்தார். அந்த படத்தை திரையிட அன்றைய திமுக ஆட்சி பிரச்சனை செய்ததாக கூறப்பட்டது. அப்போது பத்திரிகையாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, ‘ஒரு திரைப்படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கு எங்கள் ஆட்சி அவ்வளவு பலவீனமாக இருக்கின்றதா? என்று எதிர்க்கேள்வி எழுப்பியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது விஜய்யின் ‘சர்கார்’ படத்திற்கு அதிமுக அரசு பிரச்சனை செய்து வரும் நிலையில் அந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த வரலட்சுமி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

‘ஒரு திரைப்படத்தை மிரட்டும் அளவுக்கு அரசு பலவீனமாக இருக்கிறதா? பிரச்சினையை சரிசெய்வதற்கு பதிலாக அதை மோசமாக்கும் அளவுக்கு இந்த அரசு கொண்டு சென்றுள்ளது. ஒரு படைப்பை உருவாக்க முழு சுதந்திரம் உள்ள எனது இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸூக்கு எனது முழு ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

சமூக வலைத்தள பயனாளிகள் சுமார் 45 வருடங்களுக்கு முன் கலைஞர் கருணாநிதி கூறியதையும், இன்று வரலட்சுமி கூறியதையும் ஒப்பிட்டு பதிவு செய்து வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *