கர்நாடக மாநில முதல்வரிடம் சன் டிவி கொடுத்த மிகப்பெரிய தொகை!

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் கனமழை பெய்ததால் அம்மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்தது என்பது தெரிந்ததே. இதனால் அம்மாநில மக்கள் தங்களுக்கு சொந்தமான உடமைகளை இழந்து தவித்து வந்தனர்.

மத்திய அரசும், கர்நாடக மாநில அரசும் வெள்ள நிவாரணப்பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில் தொழிலதிபர்கள் கர்நாடக மாநிலத்திற்கு தாராளமாக நிதி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது சன் டிவி நெட்வொர்க் கர்நாடக மாநில வெள்ள நிவாரணமாக ரூ.5 கோடி கொடுத்துள்ளது. இதற்கான காசோலை இன்று சன் டிவி நெட்வொர்க் சார்பாக முதல்வர் எடியூரப்பா அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *