கர்நாடக உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ்-பாஜக பலமான போட்டி

கர்நாடக மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பலமான போட்டி ஏற்பட்டுள்ளது கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 2664 உள்ளாட்சி இடங்களில் 2662 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 982 இடங்களிலும் பாஜக 929 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவை விட காங்கிரஸ் 53 இடங்களில் அதிக வெற்றி பெற்றுள்ளது.

இதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளம் 375 தொகுதிகளிலும் எஸ்டிபிஐ கட்சி 17 இடங்களிலும் , பி.எஸ்.பி கட்சி 13 இடங்களிலும் , கே.பி.ஜே.பி 10 இடங்களிலும் , எஸ்பி கட்சி 4 இடங்களிலும் , கே.ஆர்.ஆர்.எஸ் 1 இடத்திலும் டபிள்யூ.பி.ஐ கட்சி 1 இடத்திலும், சுயேட்சைகள் 330 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த தேர்தல் முடிவுகள் பாஜக, காங்கிரஸ் இடையே பெரும் வித்தியாசத்தை தராததால் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *