shadow

கர்நாடகாவில் திடீர் திருப்பம்: உள்ளாட்சி தேர்தலில் குமாரசாமி கட்சி தனித்து போட்டி

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை காங்கிரஸ் ஆதரித்ததால், குமாரசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் வரும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்றும் தனித்து போட்டியிடப்போவதாகவும் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி அறிவித்துள்ளது. இதனால் காங்கிரஸ் அதிர்ச்சியில் உள்ளது.

இதுகுறித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியபோது, ‘நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதை காங்கிரஸ் கட்சி புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன். எனவே எங்கள் கூட்டணியில் எந்த பிளவும் ஏற்படாது. உள்ளாட்சி தேர்தலுக்காக மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் குமாரசாமியின் ஒருசில நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்ற மஜத கட்சியின் முடிவால் காங்கிரஸ் கடும் அதிர்ச்சியில் உள்ளது.

Leave a Reply