shadow

கொரோனா வைரஸ் நோய் தொற்று நோய் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோய் என அறிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் பரவி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது

இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோய் ஏற்கனவே குஜராத் ராஜஸ்தான் ஒடிசா ஆகிய மாநிலங்கள் தொற்றுநோயாக அறிவித்த நிலையில் சற்று முன் தமிழக அரசும் தொற்றுநோயாக அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது