shadow

கருணாநிதி 100 ஆண்டுகள் வாழ்வார்: முன்னாள் பிரதமர்

தி.மு.க. தலைவா் மு.கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள், சினிமா பிரபலங்கள் அவரை சந்திக்க காவேரி மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனா்.

தொடா்ந்து 7வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை சந்திக்க முன்னாள் பிரதமர் தேவகௌடா இன்று காவேரி மருத்துவமனக்கு வருகை தந்தார். தி.மு.க. செயல் தலைவா் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டு அறிந்தார்.

மேலும், கருணாநிதியை தொலைவில் இருந்து பார்த்ததாக செய்தியாளா்களிடம் தெரிவித்த தேவகவுடாஅ, இந்திய அளவில் மூத்த அரசியல் தலைவராக விளங்கக்கூடிய மு.கருணாநிதி 100 ஆண்டுகளை கடந்தும் நலமாக வாழ்வார் என்று கூறினார்

Leave a Reply