கருணாநிதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அமித்ஷா: திமுகவுடன் பாஜக நெருங்குகிறதா?

திமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்பட பல்வேறு மாநில முதல் மந்திரிகள் பங்கேற்க உள்ளனர் என திமுக அறிவித்துள்ளது.

திமுக சார்பில் வரும் 30ம் தேதி கருணாநிதியின் புகழுக்கு வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநில முதல் மந்திரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளதாக திமுக அறிவித்திருந்தது.

இந்நிலையில், கருணாநிதியின் புகழுக்கு வணக்கம் என்ற நிகழ்ச்சியில் பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்க உள்ளார் என திமுக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக சார்பில் சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 30-ம் தேதி கருணாநிதியின் புகழுக்கு வணக்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்கிறார். மேலும், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர் என அறிவித்துள்ளது.

திமுக நிகழ்ச்சியில் பாஜக தலைவர்களும், பாஜக நிகழ்ச்சியில் திமுக தலைவர்களும் கலந்து கொள்வதை பார்க்கும்போது இரு கட்சிகளும் நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *