கருணாநிதி சமாதியில் பஜனை முன்னேற்ற கழகம்: ராம்தாஸ் கிண்டல்

திமுக தலைவர் கருணாநிதி கடவுள் நம்பிக்கை இல்லாதவர், குறிப்பாக இந்து கடவுள்களை அடிக்கடி அவர் கிண்டல் செய்ததும் உண்டு. ஆனால் அதே கருணாநிதி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றபோது லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் இந்து கோவில்களில் அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் கருணாநிதியின் நினைவிடத்தில் திமுகவினர் பஜனை பாடினர். இதுகுறித்து கருத்து கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் ‘வாழ்க பஜனை முன்னேற்றக் கழகம்’ என கிண்டலடித்துள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் தனது டுவிட்டரில் கூறியதாவது: சென்னையில் கலைஞர் நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பஜனை பாடல்களைப் பாடிய திமுகவினர்: செய்தி – ஓ…. இது தான் பெரியார் வழிவந்தவர்களின் பகுத்தறிவுக் கொள்கையோ? வாழ்க பஜனை முன்னேற்றக் கழகம் என்றும், கலைஞர் நினைவிடத்தில் திமுகவின் ஒரு பிரிவினர் பஜனை பாடல்களை இசைத்ததன் நோக்கம் என்ன தெரியுமா? பஜனையில் பயன்படுத்தப்படும் முக்கியமான இசைக்கருவியின் பெயர் என்ன? இரு கேள்விகளுக்கும் ஒரே பதில் தான்! என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *