shadow

கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு: திருநாவுக்கரசர் தகவல்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த பத்து நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து கடந்த சில நாட்களாக காவேரி மருத்துவமனையில் இருந்து எந்தவித அறிக்கையும் வரவில்லை. இருப்பினும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக திமுக பிரமுகர்கள் கூறி வருகின்றனர்.

இந்தியாவின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மத்திய அமைச்சர்கள் என பலர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க நேரில் வருகை தந்துள்ளனர்

இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டு, தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாவும், கருணாநிதி பூரண உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சற்றுமுன் காவேரி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபின்னர் கூறினார். இதனால் திமுக தொண்டர்களிடையே சிறிது பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply