கருணாநிதி இல்லாத தமிழகத்தை நினைத்து பார்க்க முடியவில்லை: ரஜினிகாந்த்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவினை அடுத்து அவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றை தென்னிந்திய நடிகர் சங்கம் நேற்று ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், விஷால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது: கருணாநிதி இல்லாத தமிழகத்தை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. கருணாநிதியை பின்பற்றி அரசியலுக்கு வந்தவர்கள் சில லட்சம் பேர் இருப்பார்கள். கருணாநிதியால் தலைவர்களானவர்கள் சில நூறுபேர். சிவாஜிகணேசனை ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாராக்கியவர் மட்டுமின்றி இருட்டில் இருந்த பல திறமையானவர்களை அவர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

அதிமுக ஆண்டு விழாவின்போது எம்ஜிஆர் படத்தின் அருகே கருணாநிதியின் படத்தையும் வைக்க வேண்டும், ஏனென்றால் அதிமுக உருவாக காரணமாக இருந்தவர் கருணாநிதி. சூழ்ச்சிகள், துரோகங்கள் அனைத்தையும் கடந்து கட்சியை வழிநடத்தியவர் கருணாநிதி; அதிமுக உருவானதே கருணாநிதியால்தான். கருணாநிதியின் இறுதிச் சடங்கிற்கு ஒட்டுமொத்த இந்தியாவே வந்த நிலையில் முதலமைச்சர் வர வேண்டாமா?

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *