shadow

கருணாநிதியை பார்க்க சென்னை வருகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே முக்கிய தலைவர்கள் அவரை சந்திக்க வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில் கருணாநிதியின் உடல் நலம் குறித்து அறிவதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை மறுதினம் (ஆகஸ்ட் 5-ம் தேதி) சென்னை வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்பட கருணாநிதியின் உடல் நிலை தொடர்பாக பல பிரமுகர்கள் நேரில் விசாரித்து வருகின்றனர். மேலும் தமிழக சினிமா பிரபலங்கள், பல்வேறு மாநில முதல் மந்திரிகள் உள்பட பலரும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வருகின்றனர்.

Leave a Reply