கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய விஜய்: சென்னை திரும்பியதும் செய்த முதல் வேலை

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்கோளாறு மற்றும் வயது முதுமை காரணமாக காலமான நிலையில் அவருக்கு இந்தியாவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் கோலிவுட் திரையுலகினர்களும் பெருந்திறலாக கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்

இந்த நிலையில் அமெரிக்காவில் நடந்து கொண்டிருந்த ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் நடிகர் விஜய்யால் மட்டும் நேரில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லை. இருப்பினும் ‘சர்கார் படத்தின் படப்பிடிப்பை அவரது உடல் நல்லடக்கம் செய்யும் வரை படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். .

இந்த நிலையில் இன்று அதிகாலை அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பி விஜய் முதல் வேலையாக சென்னை விமான நிலையத்தில் இருந்து நேராக கருணாநிதியின் நினைவிடம் சென்று அவருக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 22 மணி நேரம் பயணம் செய்த களைப்பு இருந்தபோதிலும் கருணாநிதிக்கு முதல் மரியாதை கொடுத்து அஞ்சலி செலுத்திய விஜய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

விஜய், கருணாநிதி, அஞ்சலி, அமெரிக்கா, சர்கார், vijay, karunanidhi, respect

vijay pay his respect to Karunanidhi memorial

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *