கருணாநிதிக்காக விஜயகாந்த் எழுதிய உருக்கமான கவிதை

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை முன்னிட்டு விஜயகாந்த் ஒரு கவிதை எழுதி அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த கவிதையை தற்போது பார்ப்போம்

டாக்டர் கலைஞர் அவர்களுக்கு,

உலகமே உங்களை கலைஞரே என்று அழைத்தாலும் உணர்வுப்பூர்வமாக உங்களை
அண்ணா என்று வாஞ்சையோடு அழைத்து
உங்களுடன் பழகிய அந்த நாட்களை
எண்ணி வியக்கிறேன், விம்முகிறேன்.

தள்ளாத வயதிலும் ஓய்வுக்கே ஓய்வு
என்பதன் அர்த்தத்தை ‘உழைப்பு’
என்று மாற்றிக்காட்டிய ஒப்பற்ற தலைவரே !

அந்தி சாயும்பொழுது ஒரு சூரியன் மறைவது இயற்கை.
ஆனால் 07.08.2018 அன்று மாலை 6.10 மணியளவில்
இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ
என்று என்னும் வண்ணம், இவ்வுலகையே இருட்டாக்கியது
போன்ற ஒரு உணர்வை தந்து சென்றவரே!

உங்கள் உடல் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும்,
உங்கள் சரித்திரம் சகாப்தமாய்
என்றும் எங்களுடனேயே இருக்கும்
உங்களை வணங்குகிறேன்.

உங்களின் நினைவாக என்றென்றும்…

தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!

என்ற உங்கள் வாசகத்துடன்.

இப்படிக்கு
உங்கள் விஜி என்னும் விஜயகாந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *