கம்ப்யூட்டர் புரோகிராமர்களுக்கு இனி ஹெச்-1பி விசா கிடையாது: அமெரிக்க குடியேற்றத்துறை அறிவிப்பு

கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் இனி ஹெச்-1பி விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது. சாதாரண கம்ப்யூட்டர் புரோகிராமர் கள் இனி கம்ப்யூட்டர் சார்ந்த சிறப்புப் பணிகளுக்காக வழங் கப்படும் ஹெச்-1பி விசாவுக்கு விண்ணப்பிக்க தகுதி படைத்த வர்கள் அல்லர் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2000-வது ஆண்டில் கம்ப்யூட்டர் துறையில் ஏற்பட்ட பிரச்சினையை சமாளிக்க (மில்லினியம் சவால்) ஏராளமான கம்ப்யூட்டர் புரோகிராமர்களுக்கு அமெரிக்க நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதற்காக 2000-வது ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை (யுஎஸ்சிஐஎஸ்) பிறப்பித்த உத்தரவில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 17 ஆண்டுகளாக கம்ப்யூட்டர் புரோகிராமர்களுக்கு ஹெச்-1 பி விசா வழங்கப்பட்டு வந்தது. அது இனி வழங்கப்பட மாட்டாது. புதிய நடைமுறை அக்டோபர் 1, 2017 முதல் அமலுக்கு வரும். இதுதொடர்பான திருத்த அறிக்கை மார்ச் 31-ல் வெளியாகியுள்ளது.

ஹெச்-1பி விசாவுக்கு விண்ணப் பித்துள்ள ஏராளமான இந்திய இளைஞர்களுக்கு இப்புதிய திருத்தம் பெருத்த ஏமாற்றமளிப்ப தாக இருக்கும். இவர்களது விண்ணப்பம் அக்டோபர் 1, 2017 முதல் பரிசீலிக்கப்படும்.

ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் புரோகிராமராக சேரும் ஒருவர் அத்துறையில் தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருப்பார். அவர் நிறுவன வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றியிருக்கக்கூடும். ஆனால் அதுவே சிறப்பு வேலைக்கான ஹெச்-1பி விசா பெற தகுதியானது அல்ல என்று புதிய திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களுக்கு வேலை அளிப்பதை மறுத்து, வெளிநாட்டி னருக்கு வேலை அளிப்பது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அரசு கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹெச்-1பி விசா மூலம் வெளிநாட்டவர்களுக்கு வேலை அளித்துவிட்டு அமெரிக்கர்களைப் புறக்கணிப்பது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக யுஎஸ்ஐஎஸ் விடுத்துள்ள அறிக்கையில் இனி வரும் காலங்களில் விசா வழங்குவதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் பொதுப் பிரிவில் 65 ஆயிரம் ஹெச்-1பி விசா வழங்கப்படுகிறது. இது தவிர மேல் படிப்புக்காக 20 ஆயிரம் பேருக்கு விசா அளிக்கப்படுகிறது. இவை அமெரிக்க பல்கலைக் கழகங்களில் முதுகலை பட்டம் பயில்வோருக்காக அளிக்கப் படுகிறது.

அமெரிக்காவில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனங்களில் பணி புரிவதற்கு உரிய தகுதியோடு அமெரிக்கர்கள் இருந்தாலும் அவர்களுக்கு வேலை மறுக்கப் படுகிறது. மாறாக அதிக ஊதியத்தில் வெளிநாட்டினருக்கு வழங்கப்படுவதாக யுஎஸ்சிஐஎஸ் குறிப்பிட்டுள்ளது. இதைப் போக்குவதற்காக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஐடி நிறுவனங்களுக்கு சவால்

விசா வழங்கும் நடைமுறையில் அடிக்கடி மாற்றம் செய்வது மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதிப்பது இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையை கடுமையாக பாதிக்கும் என்று இன்ஃபோசிஸ் இணை நிறுவனரும் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியுமான கிரிஸ் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த நிதி ஆண்டில் விசா பிரச்சினையைத் தவிர வேறெந்த சவாலும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு இருப்பதாகத் தெரிய வில்லை என்று அவர் கூறினார்.

சர்வதேச ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2 சதவீதம் முதல் 3 சதவீத அளவுக்கு உயர்ந்தால், தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீடு 3 சதவீதம் முதல் 5 சதவீத அளவுக்கு அதிகரிக்கும். இந்தியப் பிரிவு தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி 9 முதல் 10 சதவீத அளவுக்கு இருக்கும்.

2008-ம் ஆண்டில் ஏற்பட்ட அளவுக்கு தேக்க நிலை இப்போதைக்கு இல்லை. இதனால் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு விசா கட்டுப்பாட்டைத் தவிர வேறெந்த சவாலும் இருப்பதாகத் தெரியவில்லை என்றார்.

சிங்கப்பூரிலும் விசா கட்டுப்பாடு

அமெரிக்காவிலும் மட்டுமல்லாமலும் சிங்கப்பூரிலும் இந்திய நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து ஐடி நிறுவனங்களுக்கு புதிய விசா ஏதும் வழங்கப்படவில்லை. தவிர ஏற்கெனவே இருக்கும் விசாக்களும் புதுப்பிக்கப்படாததால், அங்கு பணியாளர்களின் எண்ணிக்கையை சரியாக பராமரிக்க முடியவில்லை என நாஸ்காம் தலைவர் ஆர்.சந்திரசேகர் கூறியுள்ளார்.

உள்நாட்டில் மட்டும் பணியாளர்களை தேர்வு செய்வது என்பது முடியாது. போதுமான தகுதி வாய்ந்த பணியாளர்கள் அங்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் இருந்து பணியாளர்களை எடுப்பதற்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசிஎஸ், காக்னிசென்ட், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் மற்றும் எல் அண்ட் டி டெக் உள்ளிட்ட சில நிறுவனங்களின் அலுவலகங்கள் சிங்கப்பூரில் உள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *