கமல் விழாவில் உருவான ரஜினி-கமல்-விஜய் கூட்டணி! அதிர்ச்சியில் திராவிட கட்சிகள்!

 

நேற்று ’கமல்ஹாசன் 60’ விழாவில் பேசிய விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் ரஜினியும் கமலும் இணைந்து தமிழக அரசியலில் கூட்டணி வைக்க வேண்டும் எனவும், இருவரும் இணைந்து ஆட்சி அமைத்தால் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் நல்லது என்றும் பேசினார்

இதனை அடுத்து ரஜினி, கமல் ஆகிய இருவரும் இணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ரஜினி, கமல் தரப்பில் முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாகவும், ரஜினி கமல் இணைய விருப்பம் தெரிவித்த சந்திரசேகர் அவர்கள், இந்த கூட்டணியை இணைத்து வைக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

மேலும் இந்த கூட்டணிக்கு விஜய் பகிரங்கமாக ஆதரவு தெரிவிப்பார் என்றும் முடிந்தால் அவர் பிரசாரம் செய்வார் என்றும் கூறப்படுவதால் இரண்டு திராவிட கட்சிகளும் அதிர்ச்சியில் உள்ளனர்

 

Leave a Reply