கமல், காஜல் அகர்வால், ஷங்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்களா? அதிர்ச்சி தகவல்

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் நேற்று இரவு நடந்த விபத்தில் 3 தொழில்நுட்ப கலைஞர்கள் பரிதாபமாக பலியான நிலையில் இந்த விபத்தில் கமலஹாசன், காஜல் அகர்வால் மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்கள் என்று வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

காஜல் அகர்வால் ஒரே ஒரு நொடி பொழுதில் சுதாரித்து கொண்டதால் உயிர் தப்பியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் அதேபோல் ஷங்கர் இருந்த இடத்தில் பக்கத்தில் தான் கிரேன் விழுந்ததாகவும் அவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் மேக்கப் கலைஞர் ஒருவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் பலர் இந்த விபத்தில் இருந்து அதிஸ்டவசமாக உயிர் தப்பிய உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply