கமல் அரசியல் பேசலாம், நான் பேசக்கூடாதா? வெளுத்து வாங்கிய மதுமிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மதுமிதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சுதந்திர தினத்தன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஒரு டாஸ்க்கில் காவிரி நீர் குறித்து நான் பேசியதை மற்ற போட்டியாளர்கள் அரசியல் ஆக்கிவிட்டார்கள். நான் பேசியது அரசியலே அல்ல. அப்படியே அரசியல் பேசினால் என்ன தவறு? தண்ணீர் பிரச்சினையைப் பேசியது எப்படி அரசியலாகும். அப்படியென்றால் பிக்பாஸ் வீட்டில் கஸ்தூரி அரசியல் பேசினார், கமல் சார் வாராவாரம் அரசியல் பேசுகிறார். அவர்களுக்கெல்லாம் இந்த கட்டுப்பாடு ஏன் இல்லை. என்னை மட்டும் அரசியல் பேசக்கூடாது என்று கூறியது ஏன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மறைக்கப்பட்ட பல விஷயங்களுக்காக கமல் குரல் கொடுக்க வேண்டும். ஓரு மணி நேரம் எபிசோட்டில் 40 நிமிடங்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்கள் காட்டப்படுகிறது. அந்த 40 நிமிட எபிசோடை மட்டும் பார்த்து விட்டு பேசாமல் வீட்டில் 24-மணி நேரமும் என்ன நடக்கிறது என்பதை கமல் கண்காணிக்க வேண்டும். அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மட்டுமல்லாமல், மக்கள் பிரதிநிதியாகவும் மக்கள் பார்க்கிறார்கள். அந்த பொறுப்புடன் அவர் நடந்து கொள்ளவேண்டும் என நடிகை மதுமிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.”

Leave a Reply