கமல்ஹாசனை கண்கலங்க வைத்த சிவாஜியின் ‘அன்னை இல்லம்’

உலக நாயகன் கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படம் ரிலீஸாகி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து அவருடைய 60 ஆண்டு திரையுலக பயணத்தை மரியாதை செலுத்தும் வகையில் இன்று கமல்ஹாசனுக்கு சிவாஜியின் அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்துடன் கூடிய மரியாதை நடந்தது

இதில் கலந்து கொண்ட கமல்ஹாசனிடம் நடிகரும் சிவாஜியின் மகனுமான பிரபு ஒரு பாராட்டு மடலை வழங்கினார். அதில்,

அரிதாரம் முதல்தாரம் ஆன நடிப்பின் அவதாரம் திரு.சிவாஜி
அவர் வெள்ளித்திரை விஞ்ஞானி
அவரின் தலைமகன் நீ கலைஞானி
நடிகர் திலக நாயகனே பாராட்டிய
உலக நாயகனே!

நீ நடிப்பை ஆண்டு, ஆனது அறுபது ஆண்டு!
நீ ஊரை ஆண்டு, உலகை ஆண்டு
வாழ்ந்திடுக நூறாண்டு

என்று குறிப்பிடப்பட்டிருந்தது

இந்த விருந்து குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ‘அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து. வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. தம்பி பிரபு வாசித்து அளித்த பாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது. மனது புன்னகைத்தது’ என்று கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *