கமல்ஹாசனின் அடுத்த படத்தில் தென்கொரிய நடிகை!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தை அடுத்து இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள பிரம்மண்டமான திரைப்படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல தென்கொரிய நடிகையான சுசிபே என்பவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் சிம்பு, காஜல் அகர்வால், துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.