கமலோட டார்ச்லைட் பேட்டரி காலியாகிவிடும்: தமிழிசை கலாய்ப்பு

தூத்துக்குடியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டுள்ள தமிழிசை செளந்திரராஜன், தேர்தல் முடிந்த பின்னரும் அம்மாவட்டத்திலேயே சுற்றி வருகிறார். அந்த வகையில் தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டிக்கு சென்ற தமிழிசை அங்கு செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கமல் ஹாசன் போன்றவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதற்கு அடிப்படையில் ஆழமான மக்கள் சிந்தனை, அமைப்பு ரீதியான கடுமையான உழைப்பு, தலைவர்களாக மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தன்மை என அனைத்தும் வேண்டும்.

பேட்டரி பவர்புல்லாக இருக்கும்போதுதான் டார்ச்லைட் எரியும். பேட்டரி தீர்ந்தவுடன் ஒன்றுமே இல்லாமல் ஆகிவிடும் என்றார்.

Leave a Reply