கமலுக்கு ரஜினி வாழ்த்து: ரஜினிக்கு கமல் நன்றி

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்துவிட்டதை அடுத்து நேற்று நெல்லையில் அக்கட்சியின் சார்பில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது

இந்த நிலையில் கமல் கட்சியின் ஒருவருடத்திற்கு ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்…என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்…என்று கூறியுள்ளார்.

ரஜினியின் நன்றி கமல் தனது டுவிட்டரில் நன்றி கூறியுள்ளார். அதில் நன்றி ரஜினிகாந்த்: என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே
நாளை நமதே.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *