shadow

கந்துவட்டி கொடுமை கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா கைது

சமீபத்தில் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஒரு குடும்பமே கந்துவட்டி கொடுமையின் காரணமாக தீக்குளித்து இறந்தது. இந்த சம்பவம் தமிழக மக்களை உலுக்கிய நிலையில் இதுகுறித்து பிரபல கார்ட்டுனிஸ்ட் பாலா கார்ட்டூன் படம் ஒன்றை வரைந்துள்ளார்.

இந்த கார்ட்டூன் படம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை காவல் ஆணையர் ஆகியோரை விமர்சித்து வரையப்பட்டிருந்தது. மேலும் இந்த கார்ட்டூனை பாலா, தனது லைன்ஸ் மீடியா தளத்திலும், தன் ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் இந்த கார்ட்டூனை பார்த்த நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்ட்டூனிஸ்ட் பாலா மீது நெல்லை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் நெல்லை காவல்துறையினர் கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்தனர். தற்போது அவர் எங்கு உள்ளார் என்று தெரியவில்லை என பாலாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கார்ட்டூனை பாலாவின் ஃபேஸ்புக் பக்கத்தை பாலோ செய்பவர்கள் மட்டுமே பார்த்த நிலையில் அவருடைய கைது காரணமாக இன்று உலக அளவில் பிரபலம் அடைந்ததோடு, இந்த கார்ட்டூன் உலகம் முழுவதும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply